தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்துடன் ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையுடன் வெளியான தி.மு.க போஸ்டர் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலையும் கேலியையும் எதிர்கொண்டு சர்ச்சையாகியுள்ளது.
நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கும் அது என்ன தி.மு.க போஸ்டர் என்றால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை அச்சடித்து அவருடைய படத்துக்கு பின்னால், Bride of Tamil Nadu (தமிழ்நாட்டின் மணமகள்) என்று பொருள்படும்படி அச்சடித்துள்ளார்கள். இந்த போஸ்டர்தான் சர்ச்சையையும் கிண்டல் கேலியையும் தூண்டியுள்ளது. அது வேறொன்றும் இல்லை, Pride of Tamil Nadu (தமிழ்நாட்டின் பெருமை) என்று அச்சிடுவதற்கு பதிலாக, ஒரு எழுத்துப் பிழையுடன் ‘Bride of Tamil Nadu’ (தமிழ்நாட்டின் மணமகள்) என்று பொருளே மாறிவிட்டது. இதைக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தி.மு.க-வினரையும் தி.மு.க அரசையும் கிண்டலும் கேலியும் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள இந்த போஸ்டர் படம் தமிழ்நாட்டில் எந்த இடத்தில், எங்கே ஒட்டப்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை. இந்த போஸ்டரைப் பார்த்த நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் இந்த போஸ்டரில் ஸ்டாலின் படத்துக்கு பின்னால் உள்ள எழுத்துப் பிழையைக் குறிப்பிட்டு, ஒரு சமூக ஊடகப் பயனர், ‘it is Bribe of Tamil Nadu’ (இது தான் தமிழ்நாட்டின் ஊழல்) என்று விமர்சனம் செய்துள்ளார். மற்றொரு சமூக ஊடகப் பயனர் கிண்டலாக, ‘who is groom of Tamil Nadu’ (யார் தமிநாட்டின் மணமகன்) என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதற்கு இன்னொரு பயனர், “அண்ணாமலை’ என்று பதிலளித்துள்ளார்.
இந்த போஸ்டரைப் பார்த்த ஒரு இந்தி சமூக ஊடகப் பயனர், இந்தியில், “வாவ், அற்புதம், இந்த மணப்பெண்ணை யார் தூக்கிச் செல்வார்கள்” என்று கிண்டல் செய்துள்ளார்.
இப்படி, சமூக வலைதளங்களில் எழுத்துப் பிழையுடன் வெளியான தி.மு.க போஸ்டர், சமூக ஊடகப் பயனர்கள் இடையே, கிண்டல், கேலிக்குள்ளாகி சர்ச்சையாகி உள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மோடியை வரவேற்று அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களில் அளித்த விளம்பரத்தில், பின்னணியில் சீனக் கொடியுடன் ராக்கெட் ஒன்று இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது. இதைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடியும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் தி.மு.க.-வை கடுமையாக விமர்சித்தனர். தற்போது, தி.மு.க போஸ்டர் ஒன்று எழுத்துப் பிழையுடன் வெளியாகி நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி சர்ச்சையாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“