கொரோனா பெருந்தொற்று காரணமாக மறைந்த முன்னாள் அமைச்சர் இரகுமான்கான் நினைவாக அவரது மகன் சுபேர்கான் ஏற்பாட்டில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிகளின் கழக நிர்வாகிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன், " ஜெ. அன்பழகன் மறைவால், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளாராக நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கு, பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், " கட்சித் தலைமையும், மக்களும் தான் இது குறித்த முடிவை அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும், குற்றவாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஏற்கனவே, உதயநிதி செல்வாக்கு காரணமாக சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் செய்யப்பட்ட விவகாரம் கட்சிக்கும் பெறும் விவாதமாக உருவெடுத்தது. ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுமான்கான் மகன் டாக்டர் சுபேர்கான், சென்னையில் புகழ்பெற்ற எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக (Ortho Surgeon) உள்ளார். இன்றைய நிகழ்வு, சுபேர்கானின் அரசியல் நுழைவுக்கான முதல் நிகழ்வாக அமைந்ததாக தி.மு.க.வினர் கருதுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil