தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஒன்று அதற்கு மேற்பட்ட கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்டாலும், எந்த அரசியல் தேவைகளையும் எதிர்கொள்ள தலைவர்களும், தொண்டர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தி.மு.க தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த தி.மு.க தமிழகத்தில் 39 பாண்டிச்சேரியில் 1 என மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றிருந்தது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக, தமிழக காங்கிரஸ் கட்சியில், அதிகாரபகிர்வு, மற்றும் பதவியை கைப்பற்றுவதற்காக ஏற்பட்டுள்ள சலசலப்பு திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற, இந்தியா கூட்டணி பொறுப்பாளர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், ‘’எல்லாவற்றிற்கும் தயாராக இருங்கள்’’ என்று பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணி மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த 5 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தேர்தல் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மாவடட செயலாளர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள பிற நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தொகுதி பொறுப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட, கூட்டணி மாற்றங்களை பரிந்துரைப்பதற்காக திமுக உறுப்பினர்கள் குழு, சமீப காலமாக திமுகவுடனான கூட்டணி குறித்து காங்கிரஸ் பிரிவுகளுக்குள், சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தது. மேலும் இந்த சலசலப்புக்கு முக்கிய காரணம் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மாநிலத்தில் அதிகாரத்தில் பங்கு பெருவதற்கும், ஆட்சியை கைப்பற்றுவதற்கும், காங்கிரஸின் மாநில அமைப்பில் சலசலப்பு எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“