எதிர்காலத்தில் தி.மு.க. விஜய்க்கு எம்.பி. பதவி வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் - கரு. பழனியப்பன்

நான் எந்த மேடையிலும் நடிகர் விஜயை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் திமுக விஜய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

நான் எந்த மேடையிலும் நடிகர் விஜயை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் திமுக விஜய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

author-image
WebDesk
New Update
WhatsApp Image 2025-09-22 at 11.46.34 AM

Karu Palaniappan

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அண்ணா சிலை அருகே “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாவட்ட தி.மு.க. சார்பில் தீர்மானக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் கரு. பழனியப்பன் கலந்துகொண்டு பேசினார்.
 
இந்த நிகழ்ச்சியில் கரு. பழனியப்பன் பேசுகையில், "சிவகங்கை மாவட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இதுவரை 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது இந்திய அரசியலுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அதுபோலவே நாங்களும் செயல்படுகிறோம். எனவே, அவர் எங்களுடன் வந்து நிற்க வேண்டிய நேரம் இதுதான். புதிய பொருள் விற்றால்தான் தனிக்கடை ஆரம்பிக்க முடியும்" என்று கூறினார்.

Advertisment

மேலும் பேசிய அவர், "நான் எந்த மேடையிலும் நடிகர் விஜயை விமர்சிக்க விரும்பவில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் திமுக விஜய்க்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அவர் திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடும்" என்று தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: