Advertisment

திமுக எதிர்ப்பாளர்களின் ‘வீக் என்ட் என்டெர்டெய்ன்மென்ட்’: ட்ரென்ட் ஆகும் புதிய ஹேஷ்டேக் தெரியுமா?

திமுக எதிர்ப்பாளர்கள் #கள்ளதுப்பாக்கிதிமுக என்கிற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK VK Gurusamy Arrest With Illegal Gun, கள்ளதுப்பாக்கிதிமுக, கள்ள துப்பாக்கி திமுக, Illegal Gun DMK

DMK VK Gurusamy Arrest With Illegal Gun, கள்ளதுப்பாக்கிதிமுக, கள்ள துப்பாக்கி திமுக, Illegal Gun DMK

DMK And Twitter Trending: திமுக எதிர்ப்பாளர்களின் ‘வீக் என்ட் என்டெர்டெய்ன்மென்ட்’டாக #கள்ளதுப்பாக்கிதிமுக என்கிற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் ஆக்கி வருகிறார்கள்.

Advertisment

திமுக.வுக்கு எதிராக என்ன பிரச்னை கிடைத்தாலும், அதையொட்டி புதிதாக ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்வதை திமுக எதிர்ப்பாளர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

திமுக கூட்டம் ஒன்றில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு பெண் நிர்வாகி ஒருவர் சக ஆண் நிர்வாகி தனது இடுப்பைக் கிள்ளியதாக புகார் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் #இடுப்புகிள்ளிதிமுக என ஹேஷ்டேக் வெளியிட்டு திமுக எதிர்ப்பாளர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் ஆக்கினர்.

மு.க.ஸ்டாலின் சொந்த விஷயமாக லண்டன் சென்று திரும்பியபோதும் #கோபேக்ஸ்டாலின் என ட்ரென்ட் ஆக்கிவிட்டனர். அண்மையில் சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு பிரியாணி கடையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து #ஓசிபிரியாணிதிமுக ட்ரென்ட் ஆனது.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 4) #கள்ளதுப்பாக்கிதிமுக என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள். மதுரை மாநகராட்சி மண்டல குழு முன்னாள் தலைவர், திமுக.வை சேர்ந்த வி.கே.குருசாமி. இவருக்கும் அதே பகுதி அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் முன் விரோதம் உண்டு.

இந்தச் சூழலில் வி.கே.குருசாமியின் காரை நேற்று விளக்குத்தூண் போலீஸார் மறித்து சோதனை நடத்தினர். அப்போது வி.கே.குருசாமி உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்தாராம். எனவே அவரை துப்பாக்கியுடன் போலீஸார் கைது செய்தனர்.

வி.கே.குருசாமி கைதான தகவல் வெளியானதும், ட்விட்டரில் #கள்ளதுப்பாக்கிதிமுக என்கிற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். திமுக.வுக்கு எதிரான பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திமுக.வுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருவதாக ட்விட்டரில் இது பரபரப்பு டாபிக் ஆகியிருக்கிறது.

திமுக எதிர்ப்பாளர்கள் பலரே இதை தங்களது ‘வீக் என்ட் என்டெர்டெயின்மென்ட்’டாக குறிப்பிட்டு மேற்படி ஹேஷ்டேக்கை ட்ரென்ட் ஆக்குவது குறிப்பிடத்தக்கது. பகல் 2 மணி நிலவரப்படி 16,300 ட்வீட்களை திமுக.வுக்கு எதிராக வாரி இறைத்திருக்கிறார்கள்.

 

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment