சென்னை நந்தனத்தில் வரும் அக்.14 ஆம் தேதி நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி உள்பட தேசிய அளவிலான 9 பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் வரும் அக்.14 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி முன்னிலை வகிக்க, தேசிய அளவிலான 9 பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
/indian-express-tamil/media/media_files/Gc7PLAZU4xMWnsG8aulL.jpg)
இந்த மாநாட்டில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்பான கருத்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“