அந்த துரைமுருகன் வேறு; எங்கள் துரைமுருகன் வேறு..! கோர்ட்டில் திமுக சர்ச்சை மனு

வேலூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டி.துரைமுருகன் மற்றும் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல, அவர் திமுகவின் நிரந்தர பொருளாளர் அல்ல என்று திமுக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யபட்ட கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளர் அல்ல, திமுகவின் நிரந்தரப் பொருளாளரும் அல்ல என்று திமுக சார்பில் ஜனவரி 28, 2021-ல் உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முக்கிய தலைவர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். 2019 மார்ச் மாதம் வேலூர் மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து வருமானவரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் கோடிக் கணக்கான ரூபாய் பறிமுதல் செயப்பட்டது. இதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி நடைபெற்றதில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாலரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் வேலூரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டி.துரைமுருகன் மற்றும் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல, அவர் திமுகவின் நிரந்தர பொருளாளர் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டி துரைமுருகனை திமுக தனது கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அல்ல என்று ஏன் கூறியது என்று தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

திமுகவின் அமைப்புச் செயலாளரான பொன்முடியும் டி துரைமுருகன் பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்லை என்று அதே கருத்தை தெரிவித்துள்ளார். திமுக தனது பொதுச் செயலாளரையும் நிரந்தர பொருளாளரையும் இல்லை மறுத்ததால் அதிர்ச்சியடைந்த வருமானவரித்துறை, டி துரைமுருகனும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் ஒருவரே என்பதை நிரூபிப்பதற்காக ஆதாரத்தை திரட்டத் தொடங்கியது. இறுதியாக 4.4.2005 தேதியில் காட்பாடி வட்டாட்சியர் டி துரைமுருகனுக்கு வழங்கிய விவசாய நிலங்களின் பட்டாவில் டி துரைமுருகனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஆவணத்தை வருமானவரித் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து டி துரைமுருகனும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் ஒருவரே என்று நிரூபித்தது.

அந்த ஆவணத்தில் இருந்த புகைப்படம் வருமானவரித் துறையால் சோதனை செய்யப்பட்ட டி துரைமுருகன், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனைப் போலவே இருப்பதை உறுதி செய்தது.

மேலும், பட்டா சான்றிதழ் ஆதாரத்தின் மூலம், துரைமுருகனும், டி. துரைமுருகனும், ஒரே நபர்தான் என்று வருமானவரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு வாதிட்டது.

இதற்கு திமுக சார்பில், நீதிமன்றத்தில் புதிதாக ஆதாரங்களைச் சமர்ப்பிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை உயர் நீதிபதி நிராகரித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலின் பொது, வருமானவரித்துறை பணம் பறிமுதல் செய்த இடத்தின் சொந்தக்காரர் துரைமுருகனும் திமுக பொருளாளர் துரைமுருகனும் வேறு என்று திமுக மனு தாக்கல் செய்வதற்கு காரணம் என்ன என்று விசாரித்தபோது, துரைமுருகன் திமுவின் பொருளாளராக இருப்பதால் இந்த வழக்கில், அவரது பெயர் இருந்தால், அவர் பதவி வகிக்கும் திமுக அறக்கட்டளையின் கணக்குகளும் இந்த வழக்குடன் இணைக்கப்பட்டுவிடும் என்பதால்தான் என்று திமுகவின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Dmk writ petition duraimurugan is not same dmk general secretary duraimurugan

Next Story
திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com