தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், மாநில அமைச்சர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தடுக்க, அமைச்சர்களை நேரடியாக அணுக வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள், மாநில அமைச்சர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தடுக்க, அமைச்சர்களை நேரடியாக அணுக வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இனிமேல், தி.மு.க இளைஞர் அணித் நிர்வாகிகள், அமைச்சர்களை சந்திக்க விரும்பினால், சந்திப்பதற்கு நேரம் கேட்பதற்கு முன், இளைஞர் அணித் தலைமையகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர் அணி நிர்வாகிகள் பல்வேறு தேவைகளுக்காக அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக பல புகார்கள் வந்தனர். அமைச்சர்கள் இந்த விவகாரத்தை கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து உதயநிதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி அமைச்சரவையில் இடம் பெற்ற பிறகு, அமைச்சர்கள் தினமும் குறைந்தது 10 இளைஞர் அணி நிர்வாகிகளைச் சந்திப்பது வழக்கமாகி விட்டது என்பதால், நிர்வாக விவகாரங்கள் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே சமீபத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அப்படி எந்த புகார்கள் காரணமாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். “இளைஞர் அணி நிர்வாகிகள் உதயநிதியின் பெயரைப் பயன்படுத்தி அமைச்சர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது” என்று தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"