தி.மு.க. இளைஞரணி சார்பில் மண்டல பொறுப்பாளர்களின் நியமனம் பட்டியலை செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளைஞரணி பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகத்தில் 72 மாவட்ட பிரிவுகளை 9 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டலப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது.

நியமிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியல் யாதெனில்:
மண்டலம்- 1: மண்டலப் பொறுப்பாளர் எஸ்.ஜோயல் தலைமையில், சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு (அந்தமான், மும்பை, கர்நாடக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 2: மண்டலப் பொறுப்பாளர் ப.அப்துல் மாலிக் தலைமையில், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு மற்றும் கடலூர் மேற்கு ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 3: மண்டலப் பொறுப்பாளர் க.பிரபு தலைமையில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, வேலூர் மத்திய, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மற்றும் பாண்டிச்சேரி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 4: மண்டலப் பொறுப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமையில், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, நாமக்கல் கிழக்கு மற்றும் நாமக்கல் மேற்கு ஆகிய மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 5: மண்டலப் பொறுப்பாளர் கே.இ.பிரகாஷ் தலைமையில், நீலகிரி, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கரூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு ஆகிய மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 6: மண்டலப் பொறுப்பாளர் சி.ஆனந்தகுமார் தலைமையில், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மற்றும் திருவாரூர் ஆகிய மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 7: மண்டலப் பொறுப்பாளர் நா.இளையராஜா தலைமையில், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் மத்திய, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 8: மண்டலப் பொறுப்பாளர் கு.பி.ராஜா (எ) பிரதீப் ராஜா தலைமையில், விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம்- 9: மண்டலப் பொறுப்பாளர் ந.இரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு தலைமையில், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, நெல்லை கிழக்கு, நெல்லை மத்திய, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு ஆகிய மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil