சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, “சனாதன ஒழிப்பு மாநாடு” நடந்தது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, விளையாட்டுத் துறை அமைச்சரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் பேசினார்.
இதில் பேசிய உதயநிதி, “சனாதன தர்மம் டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போன்றது என்றார். இதற்கு திமுக கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாமியார் ஒருவர், “உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி நிர்ணயித்தார். இந்த நிலையில் உதயநிதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “ D டெங்கு, M மலேரியா, K கொசு என்றார்.
அதாவது DMK-ன் விரிவாக்கம்தான் டெங்கு, மலேரியா, கொசு என்றார். இதற்கிடையில் திமுக எம்.பி. ஆ. ராசா சனாதன தர்மம் ஹெச்.ஐ.வி. மற்றும் தொழுநோய் போன்றது என விமர்சித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“