தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சில நாட்களுக்கு முன் கூட்டாட்சித் தத்துவம் குறித்து கூறிய கருத்துக்கு ஆளும் திமுக பதிலடி கொடுத்துள்ளது. திமுகவின் முரசொலி நாளேடு செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள தலையங்கத்தில், கூட்டாட்சி என்ற வார்த்தையைக் கண்டு ஆளுநர் பயப்படத் தேவையில்லை என்றும் ‘மாநில சுயாட்சி கோரிக்கை பிரிவினைவாத முழக்கம் அல்ல’ என்று கடுமையாக கூறியுள்ளது.
கடந்த வாரம், கோவையில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “கூட்டாட்சி பற்றி பேசுபவர்கள், இந்தியா 1947ல் பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா இயற்கையாக உருவாகி பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியதை அடுத்து, முரசொலியின் இந்த தலையங்கம் வெளியாகி உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடும் திமுகவுக்கு வெளிப்படையான மறுப்பு தெரிவிக்கும் வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின், இந்தியா என்பது அமெரிக்காவைப் போல ஒப்பந்த ஒன்றியம் அல்ல என்றும் பல காலமாக பாரதம் ஒரு உயிருள்ள பெயராக இருந்து வருகிறது” என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ வெளியிட்டுள்ள ‘கூட்டாட்சியும் கூட்டாஞ்சோறும்’ என்ற தலையங்கத்தில், “தமிழ்நாட்டு ஆளுநர் சொல்லும் கருத்துக்கள் சமீபகாலமாக இப்படித்தான் இருக்கின்றன. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும் இந்தியாவைப் பற்றியும் பேசி இருக்கிறார். “இந்தியா ஓர் ஒப்பந்தப் பிரிவின் ஒன்றியம் அல்ல. இன்க்குள்ள மக்களின் பன்முகத் தன்மை என்பது நம் உடலின் பல்வேறு பாகங்களின் தன்மையைப் போன்றது” என்று சொலி இருக்கிறார்.
“இந்திய யூனியன் பற்றி பேசுபவர்கள் இந்தியா 1947-இல் பிறக்க வில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்த கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ல வேண்டும். பல மன்னர்கள், ராஜ்யங்களை பொருட்படுத்தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மீகங்களால் சில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் தமிழ ஆளுநர்.
கலாச்சாரம், ஆன்மீகம், பாரஹ்டம் என்ற பெரிய வார்த்தைகளைக் கொண்டால் சொவல்வது எல்லாம் உணமையாக ஆகிவிடாது.
பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன், இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை!
பிரிட்டிஷார் ஆட்சியில் கூட, அவர்களது தலைமையை ஏற்றுக்கொள்ளாத மன்னர்களும், சமஸ்தானங்களும் இருக்கத்தான் செய்தன. அதனையும் ஒன்று சேர்த்தவர் சர்தார் படேல்.
படேலுக்கு இவர்கள் சூட்டும் மகுடம் என்ன? இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக்கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3,000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை, அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்துச் சொல்லலாமா? எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்தோம் என்றால் சர்தார் படேல் சாதித்தது என்ன?
அசோகர் காலத்தில் கூட தமிழகம் நீங்கலாக இந்தியாவின் மற்ற நாட்டுப் பகுதிகள் அரசியல் ஒருங்கிணைப்பைப் பெற்றன. மௌரிய கனிஷ்க, குப்த ஆட்சிகளில்கூட வட இந்தியாவில் தனித்த ஆட்சிப் பகுதிகள் அதிகம் இருந்தன. 1,500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை.
சுல்தான்களைன் ஆட்சியில் மாகாணங்களுக்கு முன்னால் இருந்த பிரிவினை என்பதை ‘சுபா’க்கள் என்பார்கள். இத்தகைய ‘சுபா’க்கள் தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. வடபுலத்தை 15 சுபாக்களாக வைத்திருந்தார்களே தவிர, அதில் ஒன்று கூட இங்கு கிடையாது. முகலாயார்களைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷார், வடக்கைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்பை தக்காணத்திலும், தென்னகத்திலும் அமைத்தார்கள். போர் மூலமாக மட்டுமல்ல; பொருளாதாரத்தின் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியம் ஆனது.
ஔரங்கசீப் மறைவுக்குப் பின்னால் இணைக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷார் நடத்திய போரால் கிடைத்தவையே, இராபர்ட் கிளைவ் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதனை உணரலாம். 12 ஆண்டுகள் நடந்த கர்நாடகப் போர் காரணமாகத்தான் பிரிட்டிஷார் ஆளுகைக்குள் தென்னகம் வந்தது. பிளாசிப் போர், மாராட்டியர்களையும் சீக்கியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆப்கானிஸ்தானமும், காந்தாரமும் நேபாளமும் பூட்டானும் பர்மாவும் இலங்கையும் அப்படித்தான் இணைக்கப்பட்டன.
“அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியார்களால் ஏற்றுக்கொள்ளபட்ட அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே” என்ரு வரலாற்றாசிரியர் கே.எம். பணிக்கர் எழுதுகிறார்.
இன்றைக்கு இருக்கும் ‘மத்திய அரசு’ என்பது 1773 ஆம் அனடு ஒழுங்கு முறைச் சட்டத்தால் உருவானது ஆகும். அதனுள்ளும் சேராத குறுநில மன்னர்கள் இருந்தார்கள். 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் தாங்கள் தனிநாடு என்று சொன்ன மன்னர்களும் உண்டு. மாட்சிமை தாங்கிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் - கொச்சியைத் தனிநாடு என்றுதான் அறிவித்தார். படேல் -கிருஷ்ணமேனன் ஆகியோரின் வாக்குறுதி காரணமாகவும், ஹைதராபாத் மீது படையெடுப்பு நடத்தியும் காஷ்மீரத்துக்கு தனிச் சலுகை தந்தும் இன்றைய நிலப்பரப்பு முழுமை பெற்றது.
அதனால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டமானது “India that is bharath, shall be a union of states” தெளிவாகக் குறிப்பிடுகிறது.
பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கைதான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில், ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?
“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தின் மூலமாகத்தான் உருவாக்க முடியும். ‘மாநில சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. ‘மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டுதான்’ மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை” என்று முரசொலி நாளேடு ஆளுநருக்கு பதில் அளித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.