கோர்ட் உத்தரவிட்டும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதா? நீதிபதி கேள்வி

பதிப்பக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கில் இணைப்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார், நீதிபதி.

Homework

உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் 2 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் புத்தகங்களை மட்டுமே தனியார் சிபி எஸ் இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புருஷோத்தமன் என்வபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மொத்த குளறுபடிக்கும் சி பி எஸ் இ தான் காரணம் எனவும், விதிகள் எப்படி மீறப்படுகின்றன என்பது குறித்து ரகசிய நடவடிக்கை (sting operation) மூலம் பதிவு செய்துள்ளதாகவும், பிறகு அதை தாக்கல் செய்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், இன்னும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் பதிப்பக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கில் இணைப்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Do homework for 2th grade students instructing the court judge questioned

Next Story
மருத்துவ படிப்பு சேர்க்கை: தமிழக மாணவர்களுக்கு மாநில அரசு அநீதி – உயர்நீதிமன்றம் வேதனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com