Advertisment

பிறப்புச் சான்றிதழில் இன்னும் பெயர் சேர்க்க வில்லையா? உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணாதீங்க

உங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் நீங்கள் இன்னும் பெயர் சேர்க்கவில்லையா, உங்களுக்காகத்தான் இந்த அரிய வாய்ப்பு. பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
birth certificate

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் நீங்கள் இன்னும் பெயர் சேர்க்கவில்லையா, உங்களுக்காகத்தான் இந்த அரிய வாய்ப்பு. பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க, வாக்காளா் அடையாள அட்டை பெற, ஆதார் கார்டு பெற,  வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, பாஸ்போர்ட் பெற, விசா உரிமம் பெற என பல நடைமுறைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது. அதுமட்டுமல்ல, பிறப்புச் சான்றிதழ் என்பது குழந்தையின் சட்டப்பூா்வ சான்று. 

பலரும் குழந்தை பிறந்த பிறகு, மருத்துவமனையில் அளிக்கப்படும் குழந்தையின் பெயர் குறிப்பிடப் படாத பிறப்பு சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, பிறப்பு சான்றிதழை அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால், உண்மையில் அந்த பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.

ஆனால், பலர் பிறப்பு சான்றிதழ் வைத்திருந்தாலும் இன்னும் அதில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர். அப்படி, சிலர் ஆண்டுக் கணக்கிலும் வைத்திருக்கிறார்கள். அவர்களுகாக, பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயா் பதிவு செய்யாதவா்கள், தங்கள் பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024-ம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்து, விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான ஆவணங்களை கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம்.

குழந்தையின் பெயரை பதிவு செய்யாமல், 12 மாதங்களுக்குப் பின் மற்றும் 15 ஆண்டுகளுக்குள் குழந்தையின் பெயரை பதிவு செய்ய உள்ளவர்கள் உரிய காலதாமதக் கட்டணம் ரூ. 200 செலுத்தி, பிறப்பு சான்றிதழில் பெயரை பதிவு செய்வதற்கு பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எனவே, பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயரை பதிவு செய்யாதவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment