scorecardresearch

காதலியுடன் சண்டை.. ரூ.70 லட்சம் சொகுசு காரை எரித்த மருத்துவர்!

காஞ்சிபுரத்தில் வியாழன் இரவு 28 வயது மருத்துவர் ஒருவர் தனது காதலியுடன் சண்டையிட்டு, கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸை தீ வைத்து எரித்துள்ளார்.

doctor burns Rs 70 lakh luxury car in Tamil Nadu
தீ வைக்கப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார்

காஞ்சிபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதியிலுள்ள குளக்கரை அருகே சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தீ பற்றி எரிந்த கார் ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் கார் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தீயணைப்புப் துறை வீரர்கள் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் இந்தக் கார், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளம் டாக்டர் கவின்(28) என்பவருடையது என்பது தெரியவந்தது.
கவின் காஞ்சிபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரில் மருத்துவம் படித்துள்ளார்.

தற்போது கவின் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கவினுக்கும், அவர் படித்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் இடையே காதல் இருந்துள்ளது.
சம்பவத்தன்று இருவரும் அங்கு பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரை கவின் தீ வைத்து எரித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து, காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Doctor burns rs 70 lakh luxury car in tamil nadu