Advertisment

கொரோனாவால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அம்பத்தூர் சுடுகாட்டில் அடக்கம் செய்ய அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அங்கிருந்து உடல் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
andra doctor died by covid-19, doctor died of covid-19, doctor body removed from chennai ambattur crematorium, கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு, சென்னை அம்பத்தூர் மின்மாயனம், people protest against to burrying covid-19 doctor body, chennai ambattur crematorium, corona virus, chennai corona virus news, latest coronavirus news, latest tamil nadu coronavirus news

ஆந்திராவைச் சேர்ந்த 56 வயதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவருக்கு நெல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்து அவருக்கு தொற்றி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் சென்னை, வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ச அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூரில் உள்ள இந்து சுடுகாட்டில் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு புதைக்க முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த இடத்தில் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அலுவலரகளும் போலீசாரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை எடுத்துச் சென்றனர். பின்னர், அந்த இடத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “சுடுகாட்டில் மருத்துவமனை ஊழியர்களும் இருந்தனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியாளர்களும் இருந்தனர். அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூட்டமாக நுழைவதைப் பார்த்து உடலை அடக்கம் செய்யும் தொழிலாளர்கள் பயந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து மயான தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடல் அங்கிருந்து வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆனால், உடல் எங்கே எடுத்துச் செல்லப்பட்டது என்று தகவல் வெளியாகவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் உடலை சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment