முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அக்டோபர் 20-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னையை அடுத்த மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழக அரசியல் தலைவர்களுக்கு கவுரவப் பட்டம் வழங்குவது புதிதல்ல. முன்னாள் முதல்வர்களில் கருணாநிதி 4 டாக்டர் பட்டமும், எம்.ஜி.ஆர் இரு டாக்டர் பட்டங்களையும், ஜெயலலிதா 5 டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றார்.
எனினும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது கூடுதல் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பவர் ஏ.சி.சண்முகம். இவர் அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஆவார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அண்மையில் அதிமுக.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகளில் தோற்றார் ஏ.சி.சண்முகம். ஒருமுறை அங்கு தேர்தல் ரத்தானாலும்கூட, இடைத்தேர்தலிலும் அவருக்கே போட்டியிடும் வாய்ப்பை அதிமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான் அவரது தலைமையிலான பல்கலைக்கழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
ஜெயலலிதா ஆவி சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கியது போல ஸ்டாலினையும் பழிவாங்கும்... சாபம் விடும் எடப்பாடி பழனிசாமி #
டாக்டர் பட்டம் கொடுத்தது சரிதான்.. pic.twitter.com/6eQmmHP8Qx— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) October 19, 2019
‘அனிதாவை டாக்டராக்கவிடாமல் தற்கொலைக்குத் தள்ளிய எடப்பாடி, கௌரவ டாக்டர் பட்டம் பெறத் தகுதியானவரா?’ – இது, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸின் ரூபி மனோகரன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குகேட்டு சிறுமளஞ்சியில் பிரச்சாரம் செய்தபோது கூடியிருந்த பெண்களிடம் கேட்ட கேள்வி pic.twitter.com/9bAGCFNE99
— Udhay (@Udhaystalin) October 18, 2019
டாக்டர் பட்டம் வாங்கினால் இனி எடப்பாடி வைத்தியம் பார்ப்பாரா - // உபிஸ் கிண்டல்.
// டாக்டர் கலைஞர் மற்றும் டாக்டர் ஸ்டாலின் பார்த்த வைத்தியத்தை டாக்டர் எடப்பாடியும் பார்ப்பார்.????????????— SURESHKUMAR (@YeskayOfficial) October 17, 2019
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு டாக்டர் பட்டம்.
பாத்துகிட்டியா நீட் தேர்வு எழுதாம எப்படி டாக்டர் பட்டம் வாங்குறதுனு!— உயிரெழுத்து (@Yuvi_Twitz) October 16, 2019
???? மாண்புமிகு முதல்வருக்கு கௌரவ "டாக்டர் பட்டம்".
????டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது... pic.twitter.com/3XKaiptR5m— AIADMK FAST NEWS (@Karuppusaravan3) October 15, 2019
ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருந்தா ஜெயலலிதாவ காப்பாத்திருப்பார்லடா..!????????????#EdappadiPalanisamy #doctor #admk pic.twitter.com/fI8jnddhii
— சிவசங்கரன்.சி (@Siva2192) October 18, 2019
‘12-ம் வகுப்பே படித்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டமா?’ என சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதற்கு அதிமுக ஆதரவாளர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம், சூடான விவாதம் ஆகியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.