நெல்லையில் குறைந்த விலையில் சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர், கணேசன், உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் சிந்துப்பூந்துறையைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவர் மிகவும் குறைவான கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். ஏழைகளின் டாகர் என பொதுமக்களால் அழைக்கப்பட்டவர். சிறிய கிளினிக் நடத்திய இவர் ஒரு ரூபாய் கட்டணத்தில் தனது மருத்துவ சேவையை தொடங்கினார்.
இவர் கடைசியாக ரூ.80 கட்டணத்தில் மருந்தும் மாத்திரையும் வழங்கி சிகிச்சை வழங்கினார். கொரோனா காலகட்டத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும் அவர் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் சிகிச்சை வழங்கி உள்ளார். இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த செய்தி நெல்லை மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுபோல எந்த மருத்துவரும் பணி செய்ய முடியாது என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“