சங்கராச்சாரியார் கைது குறித்தும், ஜெயலலிதா உடனான உறவு குறித்தும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா ஷேஷய்யன் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா ஷேஷய்யன் சோஷியல் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அரசியல் முதல் ஆன்மீகம் வரையிலான கருத்துக்களையும், மருத்துவம் சார்ந்த ஆச்சர்யமான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும், சங்கராச்சாரியார், ஜெயலலிதா, கருணாநிதி என முக்கிய பிரபலங்களுடான உறவு குறித்து சுதா ஷேஷய்யன் தெரிவித்துள்ளார்.
சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுதா ஷேஷய்யன், ”சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தபோது, மிகுந்த மனவருத்தமாக இருந்தது. அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரைக்கும் எனக்குப் புரியல. அவர் கைது செய்யப்பட்டிருந்த சமயத்திலும், சங்கராலயத்தில் நிகழ்ச்சிகளை நான் தான் தொகுத்து வழங்கி வந்தேன். எனக்கு எந்த சிக்கலும் எழவில்லை. நான் அப்போது அரசு விழாக்களுக்கு செல்வது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. அந்த காலகட்டத்தில் நான் ஜெயலலிதா உடன் ஹெலிகாப்டரில் பயணித்திருக்கிறேன். யாரும் எதுவும் சொல்லவில்லை.
அந்த சமயத்தில் நான் மாம்பழத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தப்போது, எனக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு, அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும். ஜெயலலிதா அழைக்கிறார் என்று கூறினார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்கு போனேன். அவரும் எந்த சங்கடமும் இல்லாமல் என்னிடம் பேசினார்.
பின்னர் விடுதலையாகி வந்தப்பின் ஒருமுறை சங்கராச்சாரியாரிடம் கைது குறித்து, இரண்டு ஜெ-க்கு தான் என்ன நடந்தது எனத் தெரியும், எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று கேட்டேன். அவர் சாதாரணமாக, அதை எல்லாம் விட்டுவிடுங்கள், இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. மறந்துவிடுங்கள், எல்லோரும் நல்லவங்க என்று மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“