உயிர்காக்கும் சேவையான உன்னத பணியில் உள்ள மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1 மருத்துவர் பி.சி.ராய் பிறந்த நாளில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் பன்னாட்டு அரிமா சங்கங்கள், இந்திய மருத்துவ சங்கம் சார்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆளுநர் நித்யானந்தம் மகாகவி பாரதி மண்டல தலைவர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றி கொண்டுள்ள 108 மருத்துவர்கள் ஒரே மேடையில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் இல்லத்திற்கு கொண்டு விடவும். மறு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போட வரும் தாய், சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து மீண்டும் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் - அவசர 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் என மருத்துவ சேவையில் பல்வேறு பிரவுகளை சேர்ந்தோர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா உட்பட அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“