சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இன்று (நவம்பர் 13) கத்தியால் குத்திய சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“