Advertisment

கொரோனா அபாயம்: ஜல்லிக்கட்டை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு மருத்துவர்கள் வேண்டுகோள்!

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரை 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 4,696 பேர் காயமடைந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேதி நெருங்கி வரும் நிலையில், கொரோனா ஆபத்து மற்றும் ஓமிக்ரான் மாறுபாடுகள் காரணமாக இந்த முறை பிரபலமான காளைகளை அடக்கும் விளையாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று சுமார் 80 மருத்துவர்கள், புதன்கிழமை தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisment

ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடமும் மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் வளர்ந்து வரும் மாறுபாடு ஆகியவை பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும், மேலும் ஒரு சூப்பர் பரவலாக மாறக்கூடும் என்று பீட்டா(PETA) தெரிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு கொரோனா வைரஸை தீவிர ஆபத்து என தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களை முழுமையாக மீண்டும் தொடங்குவதை ஒத்திவைத்தது, எனவே. விளையாட்டை நடத்த அனுமதிப்பது, பொது சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு முரணானது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“தேவையற்ற மக்கள் கூட்டங்களுக்கு வழிவகுக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் போன்ற அத்தியாவசியமற்ற செயல்களைத் தடை செய்வது, கொரோனா வேகமாகப் பரவுவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், சுகாதார நிபுணர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் அவசியம்” என்று கடிதத்தில் கையெழுத்திட்ட மருத்துவர்களில் ஒருவரான தீப்ஷிகா சந்திரவன்ஷி கூறினார்.

"கொடிய தொற்று வைரஸுடன் போராடும் நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற நிகழ்வுகளுக்கு இடமில்லை" என்று பீட்டா இந்தியா அமைப்பின் சிஇஓ மணிலால் வல்லியத்தே கூறினார்.

"இந்த மருத்துவர்களின் தொழில்முறை கருத்துக்கு செவிசாய்த்து, காளைகளை கொடுமையிலிருந்தும், பொதுமக்களை உயிருக்கு ஆபத்தான நோயிலிருந்தும் காக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கைவிட வேண்டும்,” என பீட்டா இந்தியா’ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது," என்று அவர் கூறினார்.

தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரை 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 4,696 பேர் காயமடைந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

"ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுகளின் போது காளைகளுக்கு நடக்கும் மிகவும் கொடுமையான நிகழ்வுகளை பீட்டா இந்தியா ஆவணப்படுத்தியுள்ளது," ஜல்லிக்கட்டின் போது, ​ பங்கேற்பாளர்கள் பயமுறுத்தும் காளைகளின் வாலைக் கடித்துக் கொண்டும், மூக்குக் கயிற்றைக் கடித்துக் கொண்டும், ஆயுதங்களால் தேய்த்தும் அரங்கிற்குள் காயப்படுத்துகிறார்கள் என்பதை விரிவான வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இதனால் பீதியடைந்த காளைகள் மனிதர்கள் மீது மோதுகின்றன மற்றும் தடுப்புகளில் மோதி பெரும்பாலும் எலும்புகள் உடைகிறது அல்லது இறக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment