இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வாங்கிய மொத்த சதவீதம் 2.72 சதவீதமாகும். பாரதிய ஜனதா கட்சி இதே ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.17 சதவீதத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய கட்சிகள் தமிழகத்தில் பெரியளவு கால் பதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/download-1-300x188.png)
இந்த உள்ளாட்சித் தேர்தலும் திமுக, அதிமுக என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்பட்டன. இந்திய பிரதமர் மாமல்லபுரம் தமிழ் பயணம், தமிழ் மொழி குறித்து ஐநாவில் உரை, தமிழ் ட்வீட், தமிழ் பாஜக சார்பில் நடைபெற்ற சர்தார் பட்டேல் பாதயாத்திரையில் தமிழர் அடையாள உடை என பல முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேற்கொண்டாலும், உள்ளாட்சித் தேர்தலில் இவைகள் வாக்குகளாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக vs பாஜக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
குடியுரிமை திருத்தம் சட்டம், பெரியார் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகள் போன்றவை பாஜாகவிற்கும், அதிமுகவிற்கும் பின்னடவை தந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/bjp-1-300x216.png)
கன்னியாகுமரி - 2 , கோயம்பத்தூர், நாகப்பட்டினம், தேனி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் தலா ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது.
பாஜக வென்ற மாவட்டத்தில் மற்ற கட்சிகள் நிலையென்ன ?
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Untitled-300x226.png)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/indicators-300x55.png)
கன்னியாகுமரியில் திமுகவிற்கு பலத்த பின்னைடவு. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் மொத்தமுள்ள 11 இடங்களில் 5 இடங்களை வென்றுள்ளது.
ராமநாதபுரத்தில் திமுகவிற்கு இந்த முறை நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். மொத்தமுள்ள 17 இடங்களில் திமுக 11 இடங்களை கைப்பற்றியுள்ளது. ராமந்தபுரம் மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்த உள்ளாட்சி தேர்தலிலும் மதத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது என்று அரசியல் நிபுர்ணகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் பாஜக ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது.
தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர் பதவியில், அதிமுக ஏழு இடங்களிலும், திமுக 2 மற்றும் பாஜக ஒரு இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். தேனி மாவட்டத்தில் அதிமுக, பாஜகவின் கைகள் ஓங்கியுள்ளது.
மேலும் இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், சிபிஐ,சிபிஐ(எம்) போன்ற திமுகவின் தோழமை கட்சிகளும் சோதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/dheni-228x300.png)
எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தேனி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் தாக்கம் இருக்கும் என்று நம்பப்படுகிறது . பாஜக வைத்து அதிமுக தனது வெற்றியை இங்கு உறுதி செய்யலாம் (அல்லது) அதிமுக வை வைத்து பாஜக தனது முதல் சட்டமன்ற வெற்றியை இங்கு உறுதி செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஜக ஒரு இடத்தை மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கு திமுக தனது கணக்கை அபாரமாக அதிகப்படுத்தியிருக்கிறது. மொத்தமுள்ள 21 இடங்களில் திமுக 14 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/nagappatninm-296x300.png)
எனவே, பாஜக வெற்றி பெற்ற மாவட்டங்களில் திமுக அதன் தோழமை கட்சிகளும் ஒவ்வொரு நிலையில் இருகின்றன. உதாரணமாக, கன்னியாகுமரியில் காங்கிரஸ் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால் தேனி போன்ற மாவட்டங்களில் திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் சோபிக்கவில்லை என்றே கூறலாம்.