சென்னை ராயபுரத்தில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பொதுமக்கள் 27 பேரை கடித்தது. இதையடுத்து அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த நாய்க்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“