நாயை குச்சியால் குத்தி துன்புறுத்தி கொன்ற வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சரவணம்பட்டி தனியார் குமரகுரு கல்லூரியில், பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி ஆகிய இருவர்கள் வேலை செய்துவருகின்றனர். சம்பவத்தன்று, இருவரிடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாயை விரட்டும் படி கல்லூரி தரப்பில் கூறியதாக தெரிகிறது.
-
கைது செய்யப்பட்ட அஸ்ஸாம் இளைஞர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி
இதையடுத்து அந்தக் கல்லூரி வளாகத்தில் சுற்றிய நாயை விரட்டியிருக்கின்றனர். அப்போது ஒரு நாய், அவர்களிடம் மாட்டியுள்ளது. அந்த நாயை இருவரும் குச்சியால் அடித்து கொன்றுள்ளனர். இது தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின.
இது விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமின்றி காண்போர் அனைவரையும் கண்கலங்கச் செய்தது. தொடர்ந்து, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் இபிகோ 429ன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணையில், பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி ஆகியோர் நாயை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”