தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ முலம் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, கோவை மாநகரத்தில் 54,000 விண்ணப்பங்களுக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின் பயன்பாட்டில் ‘கேப்டிவ்’ எனப்படும் சொந்த பயன்பாட்டிற்காக கேப்டிவ் பயன்பாட்டிற்காக சூரியஒளி மின் உற்பத்திக்கு செல்ல விரும்பும் வீட்டு மின் நுகர்வோர், ‘சூர்யா கர்: மஃப்ட் பிஜிலி யோஜனா’ கீழ் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டாங்கேட்கோ) அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு கிலோவாட் மேற்கூரை சோலார் ஆலைக்கு ரூ. 30,000 மானியம் மற்றும் 3 கிலோவாட்டிற்கு மேல் இருந்தால் ரூ. 78,000 மாணியம். மின் நுகர்வோர்கள் ஒன்று, இரண்டு, மூன்று அதற்கும் அதிகமான கிலொவாட் சோலார் பிளாண்ட்களை நிறுவலாம். வீட்டின் மேற்கூரையில் சூரியஒளி மின் உற்பத்தி செய்வதற்கு சோலார் பிளாண்ட் அமைக்க விரும்புபவர்கள், மானியங்களுக்கு விண்ணப்பிக்கவும், அந்தந்த விநியோக நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெறவும், நிதி நிறுவனங்களிடமிருந்து கடனுக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் சூரியஒளி பெறும் மேற்கூரையின் திறனை மதிப்பிடவும் pmsuryaghar.gov.in-ல் என்ற தளத்தில் லாக் இன் செய்து தெரிந்துகொள்ளலாம்.
ஒரு வீட்டில் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், பில் தொகை ரூ. 1,719 ஆக இருக்கும். 240 யூனிட்களை உற்பத்தி செய்யும் நுகர்வோர் சோலார் மேற்கூரையை நிறுவச் சென்றால், பில் தொகை ரூ. 476 ஆக இருக்கும். அதேபோல், 600 யூனிட்கள் பயன்படுத்தினால், அவர்கள் வீட்டில் சூரியஒளி மின் உற்பத்தி நிறுவப்பட்டு அதன் பயன்பாடு 240 யூனிட்களாக இருந்தால், கிட்டத்தட்ட ரூ. 1,495 சேமிக்கப்படும். மேலும், இருமாதத்திற்கு 400 யூனிட்கள் பயன்படுத்தும் வீடுகளுக்கு, மின் கட்டணத் தொகை ரூ. 919 ஆக இருக்கும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ முலம் தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, கோவை மாநகர வட்டத்தில் 54,000 விண்ணப்பங்களுக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 25 லட்சம் நுகர்வோர்களுக்கு மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பி.எம் சூர்யாகர் (PM-suryaghar) அல்லது க்யூ.ஆர்.டி பி.எம் சூர்யா கர் (QRT pm Surya Ghar) என்ற மொபைல் செயலிகளைப் விண்ணப்பிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய நுகர்வோர்கள் www.pmsuryaghar.gov.in அல்லது www.solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“