scorecardresearch

ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் 5 வருடமாக வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காத அதிகாரிகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் ஆதிதிராவிடர் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர் .

ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் 5 வருடமாக வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காத அதிகாரிகள்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடக்கு காடு ஏகே நகரில் ஆதிதிராவிடர் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர் .

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது; வடக்கு காடு ஏ கே நகரில் புதிதாக இடம் வாங்கி அங்கு ஐந்து வருடத்திற்கு முன்பு புதிய வீடு ஒன்றை காட்டியுள்ளோம், அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

மேலும், மின் இணைப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்ட நிலையில், அவ்வப்போது மின் இணைப்பு கொடுக்க ஊழியர்கள் வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தினர் ஊழியர்களை மிரட்டி அனுப்பி விடுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் தாங்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வயதான தாய் தந்தையரை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அருகில் உள்ள உயர் சாதியினர் தங்களை அங்கு வாழ விடாமல் செய்வதாகவும், இதனால் மின் இணைப்பு வழங்க முடியாத சூழ்நிலைகளில் ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் குமார் மற்றும் அவரது உறவினர்கள் மின் ஊழியர்களை மிரட்டுவதால் இதுவரை மின் வசதி கிடைக்கவில்லை என்றும், உயர் படிப்பு முடித்து தற்போது போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் தங்களுக்கு மின் இணைப்பு இல்லாதது பெரும் குறையாக உள்ளதாகவும், இரவு ஆறு மணிக்கு மேல் பல்வேறு விச ஜந்துக்கள் பிரச்சனை  மற்றும் இருட்டில் வயதான தாய் தந்தையரை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக தங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சாதிய பாகுபாடு காரணமாக 5 வருடமாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை என கல்லூரி மாணவிகளின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dominant caste issue no power for 5 years