Cauvery protest: யோகா குருவும், ஆன்மிகத் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் வெள்ளிக்கிழமை (செப்.29) காவிரி ஆற்றை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.
இது குறித்து ட்விட்டரில் அவர், “நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல. கோடைக்காலத்தில் வறண்டு கிடக்கிறது காவிரித் தாய்.
பெரிய அளவிலான மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் மற்றும் 83,000 சதுர கிலோமீட்டர் காவேரிப் படுகையில் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே காவிரி வருடத்தில் 12 மாதங்களும் மிகுதியாகப் பாயு ஒரே வழி.
வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதை விட காவிரி அன்னையை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் வெல்லட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காவிரி நதீநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்க உரிய நீரை கர்நாடக அரசு அளிக்கவில்லை. போதிய மழை இன்மை, வறட்சி காரணமாக கொடுக்க இயலாது என அம்மாநில அரசு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், இன்று பெங்களூருவில் மாபெரும் பந்த் நடந்தது. இதில் அம்மாநில நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டு, கன்னட விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“