சென்னை உயர் நீதிமன்றம் 3 உயர் போலீஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, மாணவிக்கு நீதி கேட்டு தி.மு.க அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்களிடம் இன்று (ஜன.2) பேசினார். அப்போது," பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு பயம் இருந்து கொண்டே இருக்கும். தனியாக ஆணை பார்த்தால் பயம் இருக்கும். அந்த அளவிற்கு அந்தப் பெண் கொடுமைக்கு ஆளாகி இருப்பார். அவர்கள் குடும்பமும் மிகுந்த பாதிப்பில் இருப்பார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. ஆனால் அந்த நபர் சுதந்திரமாக நடமாடி கொண்டிருந்துள்ளார். இது முற்றிலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு.
குற்றவாளி அந்த கட்சி, இந்த கட்சி என்று கூறப்படுகிறது. நாங்கள்
பா.ஜ.க அலுவலத்தில் உள்ளோம். ஆனால் பா.ஜ.க சார்பாக பேசவில்லை. ஒரு பெண்ணாக இவ்விவகாரம் பற்றி பேசுகிறோம். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது. உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எப்படி எப்.ஐ.ஆர் வெளியானது. ஏன் அதைப் பற்றி யாரும் பேசவில்லை.
இந்த விவகாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் சண்டை போடுகின்றன. அரசியல் ஆக்குகின்றன. பெண்களுக்கு பிரச்சனை என்றால் எல்லா இடத்திலும் அவர்களை கால் பந்து போல இங்கு, அங்கும் தூக்கி போடுகிறார்கள். அவர்களை அவமதிக்கிறார்கள். இது வேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள்" என குஷ்பு கூறினார்.