அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி பெறவில்லை என்பதற்காக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல் டெக் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், இதுவரை தங்களின் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து அனுமதி பெற்று செயல்பட்டு வந்தோம்.
பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வந்தோம். ஆனால் தற்போது ஒவ்வொரு ஆண்டும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகாரம் புதுப்பிக்கும் போதும் அகில இந்திய தேசிய தொழில்நுட்ப கல்வி அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி இந்த இத்தரவை ஏஐசிடிஇ பிறப்பித்துள்ளது.
இந்த புதிய உத்தரவு, விதிமுறைகளுக்கு எதிரானது. யூஜிசியின் விதிகள் தான் எங்களுக்கு பொருந்தும். எனவே இந்த புதிய உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த புதிய விதிகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. எனவே இதற்கு தடை வதிக்க வேண்டும் என வாதிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான் புதிய விதிகள் கொண்டுவரபட்டுள்ளது என ஏஐசிடிஇ சார்பில் தொரிவிக்கபட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், மனு தொடர்பாக ஏஐசிடிஇ, யூஜிசி, மத்திய அரசு ஆகியவை நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். அதுவரை புதிய விதியின் கீழ் எந்த அனுமதி பெறவில்லை என கூறி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.