Advertisment

“கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவேன்”: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Anbumani

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உரிமை இருந்தும்  ஏன் நடத்தவில்லை? என அன்புமணி கேள்வியெழுப்பினார்.

 Caste-wise census in Tamil Nadu: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தென் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

Advertisment

மேலும், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உரிமை இருந்தும்  ஏன் நடத்தவில்லை? எனக் கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, கன்னியாகுமரி வழியாக கேரளத்துக்கு கனிம வளம் கடத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அன்புமணி ராமதாஸ், “கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளை போவதை  தடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெறும்” என்றார்.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நவ.15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

ஆனால் தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் மறுக்கிறது. இந்திய அரங்குகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆதரவாக குரல் கொடுக்கும் திமுக, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?

இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment