அடுத்த இரு மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “கொள்கை அடிப்படையிலும், வெற்றி அடிப்படையிலும் கூட்டணி வைப்போம்” என்றார். என்.டி.ஏ தொடர்பான கேள்விக்கு, “கடந்த தேர்தலில் அதிமுக தலைமையில் சந்தித்தோம்; தற்போதைய சூழலில் என்டிஏ கூட்டணி இல்லை” எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து, மக்களவை தேர்தல் குறித்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “வரும் தேர்தலில் கொள்கை அடிப்படையிலும் வெற்றி பெறும் கூட்டணியிலும் இடம் பெறுவோம்” என்றார்.
கூட்டணியில் எத்தனை சீட்கள் வரை எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நாங்கள் எப்போதுமே அகலக் கால் வைக்க விரும்புவதில்லை. கடந்த காலங்களில் 20 தொகுதிகள் வரை போட்டி கண்டுள்ளோம்.
இம்முறை ஒன்று அல்லது இரண்டு மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை கேட்போம்” எனத் தெரிவித்தார். டாக்டர் கிருஷ்ண சாமியின் இந்தப் பேட்டி, அவர் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவாரா? அல்லது திமுக கூட்டணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“