/indian-express-tamil/media/media_files/2025/08/19/dr-leema-rose-martin-ijk-coimbatore-press-meet-vice-president-candidate-cp-radhakrishnan-tamil-news-2025-08-19-11-06-43.jpg)
மகாராஷ்டிரா மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்திருப்பதை கோவை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியினர் வரவேற்பதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்திருப்பதை கோவை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியினர் வரவேற்பதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்திருப்பதை கோவை மாவட்ட
இந்திய ஜனநாயக கட்சியினர் வரவேற்பதாக, இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த மாநில மகளிர் அணி தலைவி மற்றும் மாநில இணை பொதுச் செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து அவர்களின் 84-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை துடியலூர் சாலையில் உள்ள ஆலம் இயற்கை பண்ணை வளாக கூட்ட அரங்கில் இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கோவையில் உள்ள அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், மூத்த பத்திரிகையாளர்களுக்கும் விருதுகளும், ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையும், மருத்துவ அறுவை சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும், தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளும், உதவி தொகையும் வழங்கி டாக்டர் லீமாரோஸ் மார்ட்டின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக பா.ஜ.க அறிவித்திருப்பது கோவை மாவட்டத்திற்கும் கோவை மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியினருக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது என்று இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியும், மாநில இணை பொதுச் செயலாளரும் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.