/indian-express-tamil/media/media_files/2025/11/02/covai-science-2-2025-11-02-23-20-15.jpg)
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும் ஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் மாணிக்கவாசகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் எல்லைகளைத் தாண்டி செல்லவும், நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் மாணிக்கவாசகம் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
கோவை மாவட்டம், மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் 16-வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவன தின விழா ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரும் ஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் மாணிக்கவாசகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவரும் விதமாக UV Light நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் மாணிக்கவாசகம் பேசியதாவது:
இந்திய ஏவுகணை அமைப்பின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு இந்திய பாதுகாப்பு திறன்களை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அக்னி மற்றும் ஆகாஷ் போன்ற திட்டங்களை அவரது தலைமையில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும்,எல்லைகளைத் தாண்டி செல்லவும்,நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மாணிக்கவாசகம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us