ஸ்டாலின் மேயராக இருந்தபோது, டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரலாறு மீண்டும் திரும்பி உள்ளது. ஜனவரி 19, 2000ம் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை ஆணையராக பணியாற்றியுள்ளார். கிட்டதட்ட 23 வருடங்களுக்கு பிற்கு மீண்டும் இன்று அவர் சென்னை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் “ சென்னை மாநாராட்சி அதிவேகமாக வளர்ந்துள்ளது, பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மேயாராக இருந்த போது நடைபெற்ற நினைவுகளை நான் மீண்டும் நினைத்து பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“