சேலம் மாவட்ட பாட்டாளி சொந்தங்களுடான சந்திப்பு கூட்டத்தில், பா.க.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பல போராட்டங்களை நடத்தி, 4 இடஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்தவர் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்றும் எண்த பதவியும் வகிக்காமல் இவ்வளவு செய்த கட்சி, ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற டாக்டர் ராமதாஸின் மனவேதனை பற்றி உருக்கமாகப் பேசினார்.
பா.ம.க சார்பில், சேலம் மாவட்ட பாட்டாளி சொந்தங்களுடனான சந்திப்பு கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற்றது. இந்த கூட்டத்தில் பா.க.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பா.க.க-வின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, “பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எந்த பதவியும் வகிக்காமல், ஏன் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகூட வகிக்காமல், மாநிலத்தில் 4 இடஒதுக்கீடுகளையும் மத்தில் இடஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொடுத்தவர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது, மருத்துவப் படிப்பில், எஸ்சி மற்றும் எஸ்டி-யினருக்கு இடஒதுக்கீடு வழக்க பாடுபட்டவர். அப்போது, எஸ்சி ஆணையத்தி தலைவராக இருந்த பூட்டா சிங், சென்னையில் எஸ்சி தலைவர்களைக் கூட்டி பாராட்டு விழா நடத்தினார். அதில், அம்பேத்கர், பெரியாருக்கு பிறகு, எஸ்சி மக்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் இளம் அம்பேத்கர் என்று பாராட்டினார்.
அதே போல தமிழ்நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3.5 இடஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3 உள் இடஒத்க்கீடு பெற்றுக் கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். எந்த பதவியும் வகிக்காமல், தமிழ்நாட்டு மக்களுக்காக இத்தனை இடஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்தவர் டாக்டர் ராமதாஸ். ஆனால், இப்படியான தலைவரின் மனவேதனை இவ்வளவு போராடி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியவில்லையே என்பதுதான். அதனால், பா.ம.க-வினர் கடுமையாக உழைக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று உருக்கமகாப் பேசினார்.
அண்மையில், பா.ம.க-வில் முகுந்தன் இளைஞரணி தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு, மேடையிலேயே பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எனது பேச்சை கேட்காவிட்டால் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று கூறினார். பின்னர், இருவரும் சமாதானம் அடைந்தனர்.
அதற்குப் பிறகு, சேலம் மாவட்ட பாட்டாளி சொந்தங்களுடான சந்திப்பு கூட்டத்தில், பா.ம.க நிர்வாகிகள் கூட்டத்தில், பா.க.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.