‘யாரை நம்பாதேன்னு கலைஞர் சொன்னாரு தெரியுமா?’ ராமதாஸ் திடீர் புதிர்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் ஒரு மூத்த அரசியல் வாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள் என்று கூறியதாகவும் அவர் யார் என்பதை உங்களின் யூகத்துகே விட்டுவிடுகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மூத்த அரசியல்வாதி…

By: May 26, 2020, 2:25:06 PM

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தன்னிடம் ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள் என்று கூறியதாகவும் அவர் யார் என்பதை உங்களின் யூகத்துகே விட்டுவிடுகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மூத்த அரசியல்வாதி யார் என்று நெட்டிசன்கள், அரசியல் ஆர்வலர்கள் தங்களுடைய யூகங்களைக் கூறி விவாதித்து வருகின்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக ஊடகங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசியல் விமர்சனங்கள், பாராட்டுகள், அறிக்கைகள் என அனைத்தையும் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.


இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்த காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் பதிவிட்டுள்ள இந்த புதிர் டுவிட்டைத் தொடர்ந்து, அரசியல் ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பல தரப்பினரும், திமுக தலைவர் கருணாநிதி யாரை நம்பக்கூடாது என கூறியிருப்பார் என்று தங்கள் யூகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதி ராமதாஸிடம் எந்த மூத்த அரசியல்வாதியை நம்பக்கூடாது என்று சொல்லியிருப்பார் என்று நெட்டிசன்கள் சிலர் பதில் அளித்து டுவிட் செய்ள்ளனர். சிலர் கருணாநிதி சொன்ன அந்த மூத்த அரசியல்வாதி வேறு யாரும் அல்ல, டாக்டர் ராமதாஸிடம் அவரைப் பற்றியே சொல்லி இருக்கிறார் என்று கூறியுள்ளனர். சிலர், அந்த மூத்த அரசியல்வாதி வைகோதான் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் தா.பாண்டியன் என்று தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தி.க.தலைவர் கி.வீரமணி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு சிலர், அது மூப்பனார் என்றும் திருமாவளவன் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் துரை முருகன் என்றும் மு.க.அழகிரி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எப்படியோ, ராமதாஸ் ஒரு அரசியல் புதிரை டுவிட்டாகப் பதிவிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பலரும் அவரவர் யூகங்களில் கருணாநிதி கூறிய அந்த நம்பக் கூடாத மூத்த அரசியல்வாதி யார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Dr ramadoss puzzle tweet kalaignar karunanidhi told do not trust who is senior politician netizen comment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X