டாக்டர் ராமதாஸ் தலைவராக தேர்வு; அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரை - பா.ம.க பொதுக்குழுவில் தீர்மானம்

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்து ஜி.கே. மணி அறிக்கை வாசித்தார்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்து ஜி.கே. மணி அறிக்கை வாசித்தார்.

author-image
WebDesk
New Update
PMK general body meeting

2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற உரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கூட்டணியை உருவாக்க டாக்டர் ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், அன்புமணியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்து ஜி.கே. மணி அறிக்கை வாசித்தார்.

Advertisment

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற உரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கூட்டணியை உருவாக்க டாக்டர் ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி பா.ம.க தலைவர் பதவியில் நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

பா.ம.க பொதுக்குழுவில், நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியின் தலைவராக இருப்பார் என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் வெற்றி கூட்டணியை உருவாக்க டாக்டர் ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கியமாக பா.ம.க-வில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர்.ராமதாஸுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அன்புமணியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக்குழு கூட்டத்தில் பரிந்துரை செய்து ஜி.கே. மணி அறிக்கை வாசித்தார்.

பா.ம.க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விவரம் வருமாறு: 

பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் ஒருமனதாக அங்கீகாரம்.

2026 சட்டமன்ற பொது தேர்தலில் பா.ம.க அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கூட்டணியை உருவாக்க டாக்டர் ராமதாஸுக்கு முழு அதிகாரம்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பா.ம.க நிறுவனர் தலைமை மீண்டும் போராட்டம்.
தமிழக அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

காவிரி உட்பட அனைத்து ஆறுகளிலும் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

காவேரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

புத்தாண்டு பொதுக்குழுவில் அன்புமணி மைக்கை தூக்கி போட்டது. தொடர்ந்து கட்சிக்கு கட்டுப்பாடாமல் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது. தவறான கட்சி நடவடிக்கை, ஒட்டு கேட்கும் கருவி வைத்தது, பொது குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தி ஒரு இருக்கை போட்டு நிறுவனரை அவமானப்படுத்திய அநாகரீக செயல்.

ராமதாசை தவிர வேறு யாரும் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.

அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது.

பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்தி தீர்மானம் நிறைவேற்றம்.

பா.ம.க அமைப்பு ரீதியாக 35-வது விதியை தொடங்கி தீர்மானம் நிறைவேற்றம்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் தலைமை மீண்டும் போராட்டம்.

தமிழக அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழுப்புரத்தில் நடைபெறும் பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அன்புமணி மைக்கை தூக்கிப் போட்டது, பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியதாக அழைத்தது, கைப்பேசி எண் கொடுத்ததெல்லாம் தலைமைக்கு கட்டுப்படாத செயல். தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அவர்களை வராமல் தடுத்ததும் தவறான செயல். ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்ததும் ஐயாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என வேண்டியதும் கட்சியை அவமதிக்கும் செயல். அனுமதி பெறாம நடைபயணம் மேற்கொள்வது கபட நாடகமே” என பா.ம.க ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அடுக்கடுக்காக குற்றம்சாட்டியுள்ளார்.

Dr Ramadoss Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: