Advertisment

நீதிமன்றம் கருணை காட்ட கூடாது: பணியிடை நீக்கத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சண்முகம் மனு தள்ளுபடி

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த சுப்பையா, தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
dr subbiah

DR Subbiah Shanmugam case

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த சுப்பையா, தனது பணியிடை நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். அகில பாரத வித்தியார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) முன்னாள் தேசிய தலைவராகவும் இருந்தவர்.

இந்நிலையில் மருத்துவர் சுப்பையா, மருத்துவமனையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் அத்துமீறி நுழைந்து செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சுப்பையா ணியிட மாற்றம் செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இலந்த்ரேயன் முன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “செவிலியர் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுப்பையா ஏற்கனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் இருப்பது சுப்பையா இல்லை. அவருக்கு எதிரான புகாரின் மீது நடத்திய விசாரணையின் அறிக்கையை விசாகாக்குழு தாக்கல் செய்ய வேண்டும், “என்று வாதிடப்பட்டது.

அதே சமயம் அரசு தரப்பில், “சுப்பையாவிற்கு எதிராக இது போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட கூடாது.

பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது,”என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சுப்பையாவின் மனுக்கள மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment