தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச்சு; சனாதனவாதிகளை கண்டித்து திருச்சியில் தி.க ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதித்துறையை மிரட்டும் சனாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்தும் திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகில் திராவிட கழக மாணவர் அணி சார்பில் வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதித்துறையை மிரட்டும் சனாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்தும் திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகில் திராவிட கழக மாணவர் அணி சார்பில் வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
DK protest trichy

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகில் திராவிட கழக மாணவர் அணி சார்பில் வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷொர் என்பவர் காலணி வீசிய சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து,  நீதித்துறையை மிரட்டும் சனாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்ட் அருகில் திராவிட கழக மாணவர் அணி சார்பில் வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடைபெற்றது. 

திராவிடர் கழக மாணவர் அணி மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் தலைமையில் இந்த  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவரணி மாநில துணை செயலாளர் அறிவு சுடர் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழக வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ந.கணேசன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தி.க தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் மகாமணி, மாவட்ட அமைப்பாளர் ஆல்பர்ட், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அம்பிகா, லால்குடி துணைத்தலைவர் ஸ்டார்சன், பாலச்சந்திரன், தனியரசு, பன்னீர்செல்வம், இசைமணி, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் சங்கிலி முத்து, செயலாளர் தமிழ் சுடர், பெல் ஆறுமுகம், கல்பாக்கம் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: