கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சின்னதடாகம் அருகே சுவற்றில் ஆம்னி வேன் மோதி ஓட்டுநர் உயிரிழந்தார். இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. திருவள்ளுவர் நகர்ப்பகுதியில் ராமசாமி என்பவரது மகன் செல்வராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி வந்துகொண்டு இருந்தபோது வரப்பாளையம் பிரிவு அருகே ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த சுவற்றில் மீது பயங்கரமாக மோதி நின்றது.இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாய்பாபா காலனி உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து தடாகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.