கோவை சூலூர் பகுதியில் ஆட்டோமேட்டிக் கியர் காரை ஓட்டிச் சென்றவர் ஆக்சிலேட்டரை வேகமாக அமுத்தியதால் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார், இவர் சிங்காநல்லூர் பகுதியில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரில் ஆக்சிலேட்டரை வேகமாக அமுக்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளில் புகுந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த ஒரு பெண் சிறிய காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரின் வேகத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி உயிர் தொட்டியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும் கோவை மாநகர காவல் துறை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ள நிலையில் இந்த கார் அதிவேகமாக வந்ததால் விபத்துக்குள்ளானது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“