கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் அக்ரி கண்காட்சி நடைபெற்றது. அக்ரி இன்டெக்ஸ் 2024 என்ற பெயரில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், ஏராளமான வேளாண் துறை சார்ந்த பயன்பாட்டு உபகரணங்கள், இயந்திரங்கள், பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையிலே, வேளாண் துறை சார்ந்து பல சவால்களுக்கு தீர்வு தரும் வகையில் இடம் பெற்ற இயந்திரங்களில், ராட்சத ட்ரோன்கள் விவசாயிகள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன.
இதுகுறித்து பேசிய ஹில்டு டிஃபென்ஸ் ஏரோஸ் ஸ்பேஸ் நிறுவன ஊழியர் குமார், பயிர்களுக்கு மருந்து தெளிப்பது, உரம் இடுவது போன்ற பல்வேறு பணிகளுக்கு, தற்பொழுது ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் இடத்தில் ராட்சத ட்ரோன்கள் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் பெரிய அளவிலான தொழில்நுட்பம் தெரியாத நிலையிலும், தயாரிப்பு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பயிற்சிகளை தந்து எளிதாக கையாள வழிவகை செய்யப்படுகின்றன. தானியங்கி முறைப்படி இந்த ட்ரோன் இயக்கப்படுவதனால், தண்ணீர் குறைந்தாலோ, மருந்து குறைந்தாலோ, அது விட்ட இடத்திலேயே மீண்டும் வருவதனால், விவசாயிகளுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கும். தற்பொழுது பணியாளர்கள் கிடைக்காத நிலையில் இந்த ட்ரோன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/tr9ViTaSmN8gbmcgF1zs.jpeg)
இரண்டு ஏக்கர் நிலத்தை 12 நிமிடத்தில் மருந்து தெளிக்கும் வசதியுடன் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், நேரம் மிச்சம் மற்றும் துல்லியமாக மருந்தடித்தல் போன்றவை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த நவீன தொழில்நுட்பம் அடங்கிய ட்ரோன் இயந்திரங்கள் பயன்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/7FqXfUh1CuFOTkc4zjNM.jpeg)
வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் தூண்களை வாங்குவதற்கு நடப்பாண்டில் அதிக அளவில் விவசாயிகள் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதத்தில் அரசாங்கங்களும் மானியம் தருவது விவசாயிகளுக்கு பேரு உதவியாக இருக்கின்றன.
நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவான ட்ரோன்கள் மருந்து தெளிப்பு, கண்காணிப்பு, உரம் இடுதலுக்கு உகந்ததாக இருப்பதனால் அதிக விவசாயிகள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“