தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று (பிப்.20) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், விளை நிலங்களில் சொட்டு நீர் அல்லது நுண்ணீர்ப் பாசனம் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், 2.22 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அதே போல் விளை நிலங்களில் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“