scorecardresearch

போதை மாத்திரை தர மறுத்த மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து : 3 இளைஞர்கள் தப்பி ஓட்டம்

போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருத்துக்கடை உரிமையாளரை இளைஞர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போதை மாத்திரை தர மறுத்த மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து : 3 இளைஞர்கள் தப்பி ஓட்டம்

கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்து கடை உரிமையாளரை 3 இளைஞர்கள் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மோகன் குமார் என்பவர் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று இரவு ஆட்டோவில் வந்த மூன்று இளைஞர்கள் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர்.

அதற்கு மோகன் குமார் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் மாத்திரை கேட்டு தொல்லை செய்துள்ளனர். ஆனாலும் மோகன்குமார் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த  கத்தியால் மோகன்குமாரை குத்தியுள்ளார்.

இதில் இதில் பலத்த காயமடைந்த மோகன் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், அக்கம்பக்க்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த இந்த சம்பவம் குறித்து மோகன்குமார்  சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் வழக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை கொண்டு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த மோகன் குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருத்துக்கடை உரிமையாளரை இளைஞர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Drug shop owner who refused to give drugs stabbed in covai