தமிழகம் முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரபடுத்தப்படுகிறது. குறிப்பாக சென்னையில் போதை மருந்து, மாத்திரைகள் புழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இத்தகைய மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், போதை மருந்து தடுப்பு பிரிவு காவல்துறை இத்தகைய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் கஞ்சாவும் விற்பது போலீசார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 49 போதை மாத்திரைகள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம் பட்டாக்கத்தி, ஒரு பட்டன் கத்தி ஐந்து செல்போன்கள், எடை மெஷின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“