New Update
/
சென்னை அருகே மதுபோதையில் வாகனம் ஓட்டிய தலைமைக் காவலரின் வீடியோ வெளியான நிலையில் அவர், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். முடிச்சூர் பகுதியில் தாம்பரம்-மவுலிவாக்கம் சாலையில் கார் ஒன்று தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்களை இடிப்பது போல் ஓடியுள்ளது.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று இரவு தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலை வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவரது பைக்கை மோதுவது போல் கார் ஒன்று வந்துள்ளது.
சுதாரித்துக்கொண்ட விக்னேஷ் விபத்தில் இருந்து தப்பினார். அந்த கார் முன்னால் சென்ற சில வாகனங்கள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து அக்காரை வாகன ஓட்டிகள் மடக்கிப் பிடித்த போது, காரை ஓட்டியவர் ஸ்ரீராம துரை என்ற தலைமைக் காவலர் என்பது தெரிய வந்தது.
"நீங்களே குடிச்சிட்டு வண்டி ஓட்டலாமா?"
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 2, 2024
மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தலைமைக் காவலர், பொதுமக்கள் தட்டி கேட்ட வீடியோ வைரல்; காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட காவல்துறை உயரதிகாரிகள்#Tambaram | #Car | #DrunkDrive | #Police pic.twitter.com/3PsetiCUuo
இதையடுத்து காவலரே மதுபோதையில் வாகனம் ஓட்டலாமா? இது நியாயமா, குற்றசம்பவங்களை தடுக்கவேண்டிய நீங்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? என மக்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீராம துரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.