தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்து இளைஞர்களை குறி வைத்து போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. காவல்துறையில் கடும் நடவடிக்கைகளை கடந்து கூரியர் சர்வீஸ் மூலம் இருப்பிடத்திற்கு போதை வஸ்துகள் அனுப்பப்படுவது அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கூரியா் நிறுவன பணியாளா்களுடன் இணைந்து மாநகர போலீஸாா் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினா்.
இந்த கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் என். காமினி தலைமை வகித்தாா். கூட்டத்தில் கூரியா் நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 70 போ் பங்கேற்றனா்.
அவா்களிடம் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவ வலியுறுத்தப்பட்டது.
மேலும் சந்தேகப்படும்படியான பொட்டலங்கள், முகவரிகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் திருச்சி காவல் துணை, உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“