கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை வழிமுறைத்து ஆட்டோவின் ஆர்.சி புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பசோதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஆட்டோவை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கீழே இறக்கி பரிசோதனை செய்ததில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து காவலர்களுக்கும்- ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் காவலர்களை தரைக்குறைவாக பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆட்டோ ஓட்டுனரை அடித்துள்ளார். அப்போது பதிலுக்கு அந்த ஆட்டோ ஓட்டுனரும் போக்குவரத்து காவலரை அடித்து உள்ளார்.
இதனை அடுத்து அங்கு இருந்த மற்ற போக்குவரத்து காவலர்கள் ஆட்டோ ஓட்டுனரை அடித்து அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“