Advertisment

போதை கும்பல் அட்டகாசத்தால் என்ஜினியர் பலி; உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் போதை கும்பல் அட்டகாசத்தால் பலியான என்ஜினியர் உடலை வாங்க மறுத்து நண்பர்கள், உறவினர்கள் சாலை மறியல் போலீஸ் தள்ளுமுள்ளு. ஏற்பட்டதால் அங்கு பதத்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Drunken Mob galatta, போதை கும்பல் அட்டகாசத்தால் பலியான என்ஜினியர்; உறவினர்கள் சாலை மறியல் - Drunken Mob, galatta Engineer dies in accident, relations protest in Puducherry

போதை கும்பல் அட்டகாசத்தால் பலியான என்ஜினியர்; உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் போதை கும்பல் அட்டகாசத்தால் பலியான என்ஜினியர் உடலை வாங்க மறுத்து நண்பர்கள், உறவினர்கள் சாலை மறியல் போலீஸ் தள்ளுமுள்ளு. ஏற்பட்டதால் அங்கு பதத்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

புதுவை ரெட்டியார்பாளையம் முத்துபிள்ளைப்பாளையம் ராதாநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மனைவி குசும் குமாரி (வயது 59). இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் விஷால் (வயது 29) பொறியியல் படிப்பு முடித்துவிட்டு கணினி பயிற்சி வகுப்பு சென்று வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் இரவு உணவு உண்பதற்காக வெளியில் சென்றுள்ளார். ஓட்டலில் நண்பர்களுடன் தகராறு ஏற்படவே, 2 பேர் கோபித்துக் கொண்டு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த விஷால் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

publive-image

இதனிடையே, புதுவை லபோர்த்தனே வீதியை சேர்ந்த கார்த்திக் சங்கரின் மனைவி மோனிஷா (வயது 33) தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது மோனிஷாவை தவிர அவரது கணவர் கார்த்தி சங்கர், குருசு குப்பம் மணவெளி வீதியை சேர்ந்த நவீன்குமார், ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த சூரியகுமார் (வயது 33) அரியாங்குப்பம் கவுண்டர் வீதியை சேர்ந்த அருன்தாமஸ், முகேஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர்.

இரவு 2 மணிக்கு மேல் அவர்கள் மதுபோதையில் லபோர்தனே வீதியில் மோனிஷா வீட்டு வாசலில் நின்று அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளனர். அந்த நேரத்தில் விஷாலின் நண்பர்கள் வந்த காரை மறித்து தகராறு செய்து, காரை அனுப்பியுள்ளனர்.

publive-image

பின்னால், வந்த விஷாலை அவர்கள் மறிக்க முயன்றபோது அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். அப்போது நவீன்குமார் விஷாலை தாக்க கையை ஓங்கியுள்ளார். இதில் பயந்து போன விஷால் நிலை தடுமாறி அங்கிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளார்.

இதனை முன்னால் சென்ற காரின் சைடு கண்ணாடியில் இருந்து பார்த்த அவரது நண்பர்கள் ஓடிவந்து அவரை தூக்கி செல்ல முயன்றனர். அப்போதும், குடிபோதையில் இருந்த நவீன்குமார் தரப்பினர் தகராறு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து விஷாலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து முகேஷ், மோனிஷாவை தவிர மற்ற 4 பேரையும் கைது செய்தனர்.

இருவரையும் கைது செய்யாதது குறித்து அறிந்த விஷாலின் நண்பர்கள், உறவினர்கள் இன்று புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு பிரேத பபரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலைமறியல் நடைபெறுவதை அறிந்த எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், நேரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரை கைது செய்ய தனிப்படை விரைந்துள்ளது.

எனவே, விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து உடலை வாங்கி சென்றனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment