பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று (ஜூலை 15) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதேநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் துபாய் ஆட்சியாளர் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் 75ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழா கருங்கல் ஜார்ஜ் என்பவர் தலைமையில் நடந்தது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் ஜார்ஜ், “லட்சோப லட்சம் இந்தியர்கள் துபாய் உள்ளிட்ட அமீரக நாடுகளில் வசிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் துபாய் உள்ளிட்ட அமீரக பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்த நன்றிக்கு காணிக்கையாக அவரது பிறந்தநாளை கொண்டாடினோம்” என்றார். துபாய் ஆட்சியாளருக்கு கருங்கல்லில் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிகழ்வு கவனத்தை ஈர்த்தது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“